news

Friday, March 16, 2012

பெண்களே 7 மணி நேர தூக்கம் அவசியம்


சமூக விரோதிகளின் கூடாரமானது சேதமடைந்த தானிய உலர் தளம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் தானிய உலர் தளங்கள் சேதமடைந்து, சமூக விரோதிகளின் கூடாரமாகி வருகிறது. முதுகுளத்தூரில் நெல், மிளகாய், பருத்தி, கம்பு, கேழ்வரகு உட்பட தானியங்களை உலர்த்த ரூ.4 லட்சத்தில் தளங்கள் அமைக்கபட்டுள்ளது. ஆனால் முறையாக பராமரிக்கப்படவில்லை. இவற்றை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து இருந்த இடம் தெரியாமல் காணப்படுகிறது. கொள்முதல் நிலையத்தின் சுற்றுச்சுவர் அரசியல்வாதிகளை வாழ்த்தி வரவேற்கும் பலகையாக உருமாறியுள்ளது.
இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக பயன்படுகிறது. முதுகுளத்தூரில் அரசு தானிய கொள்முதல் நிலையம் இல்லை. தானியங்களை உலர்த்த இடம் இருந்தும் அதை பயன்படுத்த முடியாமல் விவசாயிகள், ரோட்டை களமாக பயன்படுத்தி வருவதால் விபத்து அபாயம் நிலவுகிறது. உலர் களத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Wednesday, March 14, 2012

சலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே!

சலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே! உனதுரிமையைக் கேள்! சலுகை நிரந்தரமானதல்ல! உரிமை மட்டுமே நிரந்தரமானது!தேவேந்திரக்குரல்

50 ஆண்டுகளில் 20 நாடுகள் அழியும் சிவகங்கையில் விஞ்ஞானி கருத்து

சிவகங்கை:""அதிகளவு கரியமில வாயு வெளியேறுவதை தடுக்காவிட்டால், 50 அல்லது 100 ஆண்டுகளில் உலகில் 20 நாடுகள் வரைபடத்திலிருந்தே இல்லாமல் போய்விடும்,'' என, மாநில சுற்றுச்சூழல் கல்வி மைய பொறுப்பு விஞ்ஞானி ராம்ஜி, சிவகங்கையில் பேசினார். "கால நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி பணிமனை' பயிற்சியில், அவர் பேசியதாவது:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, மத்திய அரசு, "பரியாவரன் மித்ரா' திட்டத்தை துவக்கியுள்ளது. இத்திட்டம் குறித்த கருத்துக்கள், ஆசிரியர்கள் மூலம், மாணவர்களுக்கு சேர்க்கப்படுகின்றன. அதிகமான கரியமில வாயு வெளியேற்றத்தால், காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.


பன்னாட்டு ஆய்வுக் குழுவின் அறிக்கைப்படி, 50 அல்லது 100 ஆண்டுகளில், உலகில், 20 நாடுகள், வரைபடத்திலிருந்தே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது. இந்தியா உட்பட 16 நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், இதில் அடங்கும். கடந்த 200 ஆண்டுகளில், உலகளவில், 1.5 செல்சியஸ் வெப்பமும், 20 செ.மீ., கடலரிப்பும் அதிகரித்துள்ளன.


உறை பனியின் உருகும் நிலை அதிகரித்து வருவதால், இமய மலையை நம்பியுள்ள, 20 கோடி மக்கள் பாதிக்கப்படலாம்.காலநிலை மாற்றத்தை சீராக்க, கார்பன்- டை- ஆக்சைடு பயன்பாட்டை குறைக்க வேண்டும். மாணவர்களை ஊக்கப்படுத்தி, நிறைய மரங்கள் வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளிலிருந்து கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், காடுகள் அழிப்பை தடுக்கவும், அதிகளவு வாகன பயன்பாட்டை குறைக்கவும், வலியுறுத்த வேண்டும்.இல்லையெனில், எதிர்காலத்தில் பெருமளவில் விவசாயம் பாதித்து, மக்கள் உணவுக்கு கஷ்டப்படும் நிலை உருவாகலாம்.
இவ்வாறு பேசினார்.

அமெரிக்க தீர்மானத்தை முறியடிக்க இலங்கை பெரும் முயற்சி

கொழும்பு: ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், தனக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை முறியடிக்கும் வகையில், எல்.எல்.ஆர்.சி.,யின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்த தனது திட்டத்தைத் தாக்கல் செய்ய, இலங்கை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் நடந்து வரும், ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின் 19வது கூட்டத் தொடரில், கடந்த 7ம் தேதி இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு இதுவரை, 22 நாடுகள் ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளன. ஆனால், 47 நாடுகள் உறுப்பினராக உள்ள கவுன்சிலில் ஒரு தீர்மானம் ஆதரவு பெற, 26 நாடுகளின் ஆதரவு தேவை. இதில், இந்தியாவின் நிலை இன்னும் இழுபறியிலேயே உள்ளது. இதற்கிடையில், மற்ற நாடுகளின் ஆதரவைப் பெறும் பல்வேறு முயற்சிகளில், இலங்கை தீவிரமாக இறங்கியுள்ளது.


இந்நிலையில், அமெரிக்க தீர்மானம், வரும் 20 அல்லது 23ம் தேதி ஓட்டெடுப்புக்கு விடப்படலாம் எனத் தெரிகிறது. இத்தீர்மானத்தை முறியடிக்க அல்லது ஓட்டெடுப்பு நடக்க விடாமல் தடுக்க அல்லது தீர்மானத்தின் சில பகுதிகளை திருத்தங்கள் மூலம் நீர்த்துப் போகச் செய்ய, இலங்கை முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஜெனீவா நகரில் திரண்டுள்ள இலங்கை பிரதிநிதிகள் குழுவினர், இலங்கை நியமித்த, கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் (எல்.எல்.ஆர்.சி.,) பரிந்துரைகள் எவ்விதத்தில் அமல்படுத்தப்பட உள்ளன என்பதை விளக்கும் வகையில் ஒரு திட்டத்தை, கவுன்சிலில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். அத்திட்டத்தை தயாரிக்கும் முயற்சியில் முழு மூச்சாக இறங்கியுள்ளனர் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதேநேரம், இலங்கையின் இந்த இழுத்தடிப்புகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனமும், எச்சரிக்கையும் தெரிவித்துள்ளது. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நேற்று பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சக சார்புச் செயலர் ராபர்ட் ஓ பிளேக்,"நடந்த போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பேற்றல், நல்லிணக்கம் ஆகியவை இலங்கையின் நலனுக்கு முக்கியம். இதைச் செய்யத் தவறிய நாடுகள் மீண்டும் வன்முறைகளில் சிக்கியுள்ளன. இலங்கையும் அந்த தவறைச் செய்தால், அந்த நிலை இலங்கையில் மீண்டும் ஏற்படலாம்' என்றார். இந்நிலையில், சேனல் 4 செய்தி நிறுவனம் புதிய வீடியோ தொகுப்பு வெளியிடுவது குறித்து பேட்டியளித்த, அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட்,"இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா பலமுறை கவலை தெரிவித்துள்ளது. போர் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புக் கூறுவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கிறது. இலங்கை தான் கூறிய உறுதிமொழிகளை அமல்படுத்த தவறியதால் தான், இந்த தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது' என்றார். கவுன்சிலில் நேற்று முன்தினம் நடந்த விவாதத்தின் போது, நார்வே வெளியிட்ட அறிக்கையில்,"மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்களுக்கு இலங்கை பதில் அளிக்க வேண்டும். எல்.எல்.ஆர்.சி., பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளது.