news

Monday, June 25, 2012

பா.ஜ மாநாட்டில் தேவேந்திரகுல வேளாளர்

தேவேந்திரகுல வேளாளர் பிரிவினரை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பா.ஜ மாநாட்டில் தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க தீர்மானங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல்


தேசிய பயங்கரவாத தடுப்பு மையமானது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என மதுரை பாஜக தாமரைச் சங்கமம் 5-வது மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரையில் வியாழக்கிழமை தொடங்கிய பாஜக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

*இலங்கைப் பிரச்னையில் தமிழக அரசியல் கட்சிகள் சேர்ந்து குரல் கொடுப்பது அவசியம். ஆனால், இலங்கை சென்ற குழுவில் அதிமுக, திமுக இடம் பெறாதது துரதிருஷ்டவசமாகும்.

*இலங்கைத் தமிழர் வாழ்வு குறித்து கவலைப்படாத மத்திய காங்கிரஸ் திமுக கூட்டணி அரசை மாநாடு கண்டிக்கிறது. இனிமேலாவது இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது.

*மதக்கலவரத் தடுப்பு மசோதா எனும் பெயரில் மாநில அரசின் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கும் உரிமையைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. காவல் துறைக்கு அதிகாரம் வழங்குதல், உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை மாநில அரசுகளின் அதிகாரத்தை தட்டிப்பறிக்கும் வகையில் உள்ளன.

*மத்திய அரசின் இத்தகைய போக்கிற்கு மாநில சுயாட்சி பற்றிப் பேசிவரும் திமுக போன்ற கட்சிகள் ஆதரவு அளிப்பது சரியல்ல. ஆகவே கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

*சேதுசமுத்திரத் திட்டத்தில் பெரும்பாலான மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக, பாரம்பரியச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

*மழை நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு மின்சாரப் பற்றாக்குறைய முற்றிலும் நீக்கி மூடியுள்ள தொழிற்சாலைகள் இயங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*இந்து ஆலயங்களில் வசூலிக்காத குத்தகை பாக்கியை வசூலிக்கவும், ஆலயச் சொத்துகளின் வாடகை, வருவாய் ஆகியவற்றை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுவதை தடைச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

*தென்தமிழகத்தில் தொழில் வளர்ச்சியடைய குளச்சல் துறைமுகம் உருவாக்கம், மதுரை விமான நிலையத்தில் சர்வதேச விமானம் வந்து செல்ல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்த வேண்டும். *விருதுநகர்-அருப்புக்கோட்டை உள்ளிட்ட நகர்களின் அகல ரயில் பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டும்.
*குடும்பன் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் தேவேந்திரகுல வேளாளர் பிரிவினரை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க சிறப்புப் பயிற்சித் திட்டத்தை செயல்படுத்த அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். வறுமையில் வாடும் மாணவ, மாணவியருக்கு சாதி பாகுபாடின்றி மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை ஏழை இந்துக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அஞ்சா மள்ளர் குலமள்ளர் தெய்வேந்திரன் வேந்தன் தேவேந்திரக் குடும்பர்

தமிழை ஈன்று அதற்கு சங்கம் வைத்து வளர்த்த மள்ளர் குளம்
சீறி வரும் வேலுக்கும் அஞ்சா மள்ளர் - ஒளவையார் “ வானுட்கும் வழ நீண்டமதில் மள்ளன் மூதூர் வய வேந்தெ. ” - புறநானூறு – 18,குடபுலவியனார் "தேவேந்திர பள்ளன் வெள்ளை பூச்சக்கரக் குடை வெள்ளையானை படைத்தவர்" - -நல்லூர் செப்புப்பட்டயம் "வெள்ளாண்மை யுலகில் வியனப்பேற் விளைய வள்ளல் தெய்வேந்திரன் வரிசையா யனுப்ப வெள்ளானை மீதில் விரைவகை முளுதுயர் தெள்ளிய புகழ் சேர் சேறாடிக் குடையும் செகத்தில்க் கொணர்ந்த தேவேந்திரக் குடும்பர் சேத்துக்கால் செல்வரான குடும்பர்களும்" - சிவகங்கை குடும்பர்கள் செப்பேடு தமிழகத்தில் மருத நிலத்தில் முதன் முதலில் மள்ளர்களால் நெல் கண்டுபிடிக்கப்பட்டு விளைவிக்கப்பட்ட காலத்தில் குடும்பம், ஊர், பேரூர், நகரம், நாடு, அரசுகள் தோன்றின. நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவன் இந்தப் பண்பாட்டினை உடைய மக்களுக்குத் தலைவனானான். தமிழ் இலக்கியங்களில் நமக்குக் கிடைக்ககூடிய மிகப் பழமையான நூலான தொல்காப்பியம் இந்தப் பண்பாட்டுத் தலைவனை வேந்தன் எனக் கூறுகிறது. இந்நூலில் இந்தப் பண்பாட்டுத் தலைவனான வேந்தன் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்ட மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையைக் கூறுகிறது. “ வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும் ” —– தொல்காப்பியம் – பொருளதிகாரம் நெல் நாகரிகம் தோன்றிய மருத நிலத்தின் கடவுள் வேந்தன் எனக் கூறுகிறது. தொல்காப்பிம் தோன்றியது கி.மு. 500 என்று கூறப்படுகிறது. ஆகையால் இந்த நெல் நாகரிகம் அதற்கும் பல நூற்றாண்டுகள் முன்னமேயே தோன்றி இந்நிலைக்கு முதிர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பின்பு நெல் நாகரிகத்தைதத் நமது பண்பாடாகக் கொண்ட மருத நில மள்ளர்களின் பண்பாட்டுத் தலைவர்கள் பலரும் வேந்தன்-வேந்தர் எனப்பட்டனர். இப்பண்பாட்டுத் தலைவர்களான தமிழக அரசர்கள் தமிழ் மூவேந்தர் சேர வேந்தன், சோழ வேந்தன், பாண்டிய வேந்தன் எனப்பட்டனர். மருத நில இறைவனான (அரசனான) வேந்தனின் வழித் தோன்றல்கள் தாம் மள்ளர் குல சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள். [தொகு] பாண்டியன் வேந்தன் பாண்டியன் நெடுஞ்செழிய மள்ளரை வேந்தன் என்றதும் அவனுடைய நீண்ட மதில் கொண்ட மதுரையை மல்லன் மூதூர் என்றதும் அவன் நெல்லின் மக்களின் குலத்தைச் சார்ந்தவன் என்பதும் பின்வரும் பாடல்களால் அறியலாம். “ வானுட்கும் வழ நீண்டமதில் மல்லன் மூதூர் வய வேந்தெ. ” —- புறநானூறு – 18,குடபுலவியனார் பாடியது. “ சீர் சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ ” —- மதுரைக் காஞ்சி வரி 87 – 88, மாங்குழ மருதனார். (பாண்டிய வேந்தர் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழிய மள்ளரைப் புகழ்ந்து பாடியது). “ பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர் குப்பை நெல்லின் முத்தூறு தந்த கொற்ற நீன்குடைக் கொடித் தேர்ச் செழிய ” —- புறநானூறு 24 மாங்குடி மருதனார் தலையாலாங்காத்துச் செருவென்ற நெடுஞ்செழிய மல்லரைப் பாடியது. [தொகு] சோழ வேந்தன் சோழன் குளமுற்றுத் துஞ்சிய கிள்ளி வளவன் மள்ளரை வெள்ளைக்குடீ நாகனார் தமிழ் மூவெந்தருள்ளும் சிறந்த வேந்தர் எனப் பாடியது. “ மண்திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர் முரசு முழ ங்கு தானை மூவருள்ளும் அரசெனப்படுவது நினதே பெரும ஆடுகட் கரும்பின் வெண்பா நுடங்கும்; நாடெனப்படுவது நினதே யத்தை, ஆங்க நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தெ. ” —- புறநானூறு 35. வெள்ளைக் குழ நாகனார் கிள்ளி வளவன் மள்ளரைப் பாடியது. “ சாலி நெல்லின் சிறை கொள் வேலி ஆயிரம் விளையுட்டு ஆக காவிரி புரக்கும் நாடு கிழவோனே. ” —- பொருநர் ஆற்றுப் படை வரி 246 – 248. கரிகாற் பெருவளவந்தான் மள்ளரைப் புகழ்ந்து பாழயது. [தொகு] சேர வேந்தன் சேரன் வேந்தன் பாலை பாழய இளங்கோ மள்ளரை ஏருடைய வேந்தன் என்றது. “ விண்பொருபுகழ் விறல் வஞ்சிப் பாடல் சான்ற விறல் வேந்தனும்மெ வெப்புடைய வரண் கடந்து தும்புறுவர் புறம் பெற்றிசினே புறம் பெற்ற வயவேந்தன் மறம் பாழய பாடினியும்மே ஏருடைய விழுக் கழஞ்சிற் சீருடைய விழைபெற்றிசினே ” —-புறநானூறு 11, பேய்மகள் இளவெயினி பாடியது. “ உழுபடையல்லது வேறு படையில்லை திருவில் அல்லது கொலை வில் அறியார் நாஞ்சில் அல்லது படையும் அறியார். ” —(நாஞ்சில் – கலப்பை) – புறநானூறு 20, குறுங்கோழியார் கிழார் பாடியது. (சேர வேந்தர் யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை மள்ளர் பற்றி). [தொகு] அதியமான் நெடுமான் அஞ்சி மள்ளரை ஒளவையார் பாடியது சீறி வரும் வேலுக்கும் அஞ்சா மள்ளர் “ இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல், மடவரல், உண்கண், வாள்நுதல், விறலி! பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?’ என, வினவல் ஆனாப் பொருபடை வேந்தே! ஏறி கோல் அஞ்சா அரவின் அன்ன சிறு வல் மள்ளரும் உளரே, அதா அன்று, பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை வளி பொரு தெண் கண் கேட்பின், அது போர்’ என்னும் என்னையும் உளனே ” —-புறநானூறு 89. பொருள் : அதியமானின் பகையரசர் கேலி பேச ஒளவையார் கூறியது: ஆபரணங்களால் இழைக்கப் பெற்ற உடையினை அரையில் கட்டிக் கொண்டும், மைதீட்டிய கண்ணினையும் அழகிய நெற்றியையும் கொண்ட விறலி! என்னோடு போர் செய்து வெற்றி பெறுவாரும் உள்ளாரோ? உன்னுடைய நாட்டில் என என்னைப் பார்த்து (ஒளவையார்) வினவுகின்றான். போர்ப் படையுடைய வேந்தனே, எதிர்த்துப் பாய்ந்து வரும் வேலுக்கும் அஞ்சாத பாம்பு போல் சீறிப் பாயும் வலிமையுள்ள மள்ளர் குலப் போர் மறவரும் உள்ளனர் எம்நாட்டில். அது மட்டும் அல்லாது மன்றத்திலே தூங்கும் போது வீசுகின்ற கூதிர்க் காற்றினால் எழும் ஓசையைப் போர் முரசின் ஒலி என்று எண்ணி உடன் எழுகின்ற போர் எண்ணமும், ஆர்வமும் உள்ள எம் மன்னனுன் உள்ளான். இவற்றையெல்லாம் கண்டும், கேட்டுமா நீ இவ்வாறு கேட்கின்றாய்? கேரள மாநிலம், வயநாடு பகுதியில் 2000 ஆண்டு பழமையான எடக்கல் குகைக் கல்வெட்டு சேரவேந்தன் விஸ்ணுவர்மன் குடும்பர் குலத்தினன் எனக் கூறுகிறது. “ “விஸ்ணுவர்மம் குடும்பிய குல வர்த்த நஸ்ய லிகித”. ” இதன் பொருள் – விஸ்ணுவர்மனின் குடும்பம்; குலம் வளர எழுதியது என்பதாகும். குடும்பன் என்பது மள்ளர்களில் பட்டப் பெயர்களில் ஒன்றாகும். தேவேந்திர குலத்தினரின் உயர்வு (வேந்தன் குலத்தினர்) இந்த வேந்தர்கள் மள்ளர் குலத்தினர் என்பது சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் கூறப்படுகின்றன. வேந்தன் பின் நாளில் இந்திரன், தேவேந்திரன் எனப்பட்டதால் இவர்களும் – இவர்களின் வழித்தோன்றல்களும் தேவேந்திர குலத்தினர் என்றும் கூறப்படுகின்றனர். சேர, சோழ, பாண்டியர்கள் வேந்தர்கள் என்பதையும் அவர்கள் நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவர்கள் என்பதையும் இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த நெல் நாகரிகத்தின் தலைமக்களாகிய உழவர்களும், மல்லர் குலத்தினரும் – தேவேந்திர குலத்தினரும் இருந்த சிறப்பை, முதன்மையை கீழ்வரும் பாடல்கள் காட்டுகின்றன: “ உண்டி கொடுத்தோ ருயிர்கொடுதோரே உண்டி முதற்றே யுணவின் பிண்டம் உணவெனப்படுவது நிலத்தொடு நீரே ” —- புறநானூறு – 18, குடபுலவியனார் பாடியது. “ சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவெ தலை. ” —- திருக்குறள் 1031. “ உழதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர். ” —-திருக்குறள் 1033. மருத நில மக்கள் மள்ளர், உழவர், களமர், கடைஞர், வினைஞர், களைஞர், கம்பளர், தொழுவர், கடைசியர்,காலாடி, ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். மன்னர்களும் வேந்தர்களும் மள்ளர் என்றும் உழவர் என்றும் பெருமைப் படக் குறிப்பிடப்பட்டனர். பிற தொழில்களில் உள்ள சாதனையாளர்களும் உழவர்களாக மேன்மையடைந்ததாகக் கூறப்பட்டனர். அதனாலேயே ஏருழவர், சொல்லெருழவர், வாளெருழவர், வில்லேருழவர் என்ற சொற்றொடர்கள் இலக்கியங்களில் ஆளப்பட்டன. உழவர், வீரர், மன்னர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இம்மூவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக “ "அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்" ” —- என்று திவாகர நிகண்டும். “ "செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப" ” —- என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன. நெல் நாகரிகத்தில் பண்பாட்டுத் தலைவர்கள் மற்றும் அவர்களின் சுற்றுத்தார் தமது செல்வ வளத்தாலும் படை வலிமையாலும் பிற நில மக்களுக்கும் தலைவர்களாக (இறைவனாக) இருந்தார்க்ள. இதனைத் தொல்காப்பியம். “ "மாயோன் (திருமால்) மேய காடுறை (முல்லை) உலகமும் சேயோன் (முருகன்) மேய மைவரை (குறிஞ்சி) உலகமும் வேந்தன் (தேவேந்திரர்) மேய தீம்புனல் (மருதம்) உலகமும் வருணன் மேய பெருமணல் (நெய்தல்) உலகமும்" ” —-தொல்காப்பியம். திருமால், முருகன், தேவேந்திரர், வருணன் ஆகியோர் முறையே முல்லை, குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் நிலங்களுக்கு இறைவர்கள் எனக்கூறும். பாலை நில இறைவி கொற்றவை ஆகும். இலக்கியங்கள், புராணங்கள் இந்தப் பண்பாட்டுத் தலைவர்களின் உறவு முறைகள் பற்றி தெளிவாகக் குறிப்பிடுகின்றன. சிவன் மள்ளர். கொற்றவை எனப்படுகிற பார்வதி ஆகியோரின் குமரன் சேயோன் என்படுகிற முருகன் ஆகும். தேவேந்திரர் எனப்படுகிற வேந்தனின் மகள் தெய்வயானையின் கணவர் சேயோன் பார்வதியின் சகோதரர் மாயோன் எனப்படுகிற திருமால் மள்ளர் ஆகும். வருணன் மள்ளர் வேந்தன் எனப்படுகிற தேவேந்திரருக்குக் கீழ்பட்ட ஒரு தலைவன். மள்ளர் குலத்தினரின், தேவேந்திர குலத்தினரின், தமிழரின் இந்த நெல் நாகரிகம் தான் பல கலைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் தோற்றுவித்து ஆதரித்து வளர்த்து மக்களிடையே பரப்பியுள்ளது. மனித குலத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், வளத்திற்கும் பண்பாட்டு மேலாண்மைக்கும் காரணமாக அமைந்துள்ளது. மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான். “ பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய்போல் மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கைவருட வெள்ள நீரிரு மருங்குகால் வர்p மிதந் தேறிப் பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி. ” —- பெரியபுராணம், திருக்குறிப்புப் தொண்டர் நாயானார் புராணம், பாடல் 22. இவர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருத நிலத்தைக் மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார் இன்னொரு பாடலில். “ கைவினை மள்ளர் வானங் கரக்க வாக்கிய நெற் குன்றால் மொய் வரை யுலகம் போலும் மளரிநீர் மருத வைப்பு. ” —- பெரியபுராணம், – திருநாட்டுச் சிறப்பு, பாடல் 25 “ “குன்றுடைக் குலமள்ளர்” ” என்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார். “ நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின் கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின் இன மள்ளர் பரந்த கையில் கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே எனப் பொலியும் தகையும் காண்மின் ” —- கம்பராமாயணம். இப்படி என் குலத்தை பற்றி பாடாத புலவர்கள் இல்லை ....... தமிழை ஈன்று அதற்கு சங்கம் வைத்து வளர்த்த மள்ளர் குளம் இங்கிருக்க ......இன்று தமிழர்கள் என்று மார்தட்டிகொண்டிருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை பலருக்கு ......... வரலாறு திரும்பும் ....நான் அப்பேற்பட்ட மள்ளர் வம்சத்தில் பிறந்தேன் என்று பெருமைப்படுகிறேன் ..... மள்ளர் என்று நான் கூறியது தேவேந்திர குலம் ..... தேவர் அல்ல .....

மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு!

எழுதப்படாத சரித்திரம் 28
‘‘மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு!’

’தை’ முதல் நாளை புத்தாண்டின் முதல் நாளாகக் கொண்டாடச் சொல்கிறது அரசு. நமக்கு அதில் மாறுபாடில்லை. தமிழர் வரலாற்றில் பொங்கல் நாள், உழவர் நாளாகவே இருந்து வந்திருக்கிறது. உழவர் நாள், ‘மள்ளர்’ நாள் என்றால் அது இன்னும் கூடுதல் பொருத்தமாகவே இருக்கும்.




மள்ளர்களைப் பள்ளர்கள் என்று பிற்கால, நாயக்கர் காலத்துச் சிற்றிலக்கியங்கள் சொல்கின்றன. சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன. சங்க காலத்தில் இன்று பள்ளர் என்று தவறாகக் கூறப்படும் மக்களுக்கு, ‘மள்ளர்’ என்ற பெயரே இருந்திருக்கிறது. அண்மைக்காலமாக இந்த மக்கள், தங்களை தேவேந்திர குல வெள்ளாளர் என்று அழைத்துக்கொள்கிறார்கள். அழைக்கப்படுகிறார்கள். அதன் வரலாற்றை ஆராய்வோம்.தமிழர்கள், சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள். தங்கள் வாழ்நிலங்களை நான்கு வகையாகப் பிரித்தார்கள். மலை மற்றும் மலைசார்ந்த நிலப்பரப்பைக் குறிஞ்சி என்று அழைத்தார்கள். அந்த நிலத்தில் மலரும் பூக்களில் சிறப்பு பொருந்தியது குறிஞ்சிமலர். மலையைவிட்டு, வாழ்வாதாரம் தேடிக் கீழே வந்தவர்கள், காட்டுப்பகுதியைக் கண்டடைந்தார்கள். அந்நிலத்துச் சிறந்த பூவின் பெயரால் அது முல்லை என்றாயிற்று. கடற்கரை மக்கள், தங்கள் பகுதிக்கு அந்நிலத்து நெய்தலைக் கண்டு, அதற்கு நெய்தல் நிலம் என்று பெயர் கொண்டார்கள்.

காட்டை அடுத்துள்ள, சமதளமும், ஆற்றங்கரைக்கு அழகாகவும் உள்ள பூமியை அங்கே அடர்ந்து வளர்ந்துள்ள மருத நிலத்தின் பெயரால் வழங்கினார்கள். ஆற்றுப் பாசனத்தின் உதவியுடன், நெல் விவசாயத்தை மருத நிலத்துக்குக் குடி பெயர்ந்தவர்கள் கண்டுபிடித்தார்கள். மனித குல முன்னேற்றத்தைச் சாத்யமாக்கியது மூன்று கண்டுபிடிப்புகள். முதலில் நெருப்பு, இரண்டாவது சக்கரம், மூன்றாவது விவசாயம். நிலத்தை உழுது நெல் விதை தூவப்படுவதால், அதைச் செய்தவர்கள் உழவர்கள் எனப் பெயர் பெற்றார்கள். விவசாயத்துக்குச் செயற்கை மற்றும் ரசாயன உரங்களைக் கொடுத்து நிலங்களை அழிக்கும் அரசுகள் அந்தக்காலத்தில் இல்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஒரு மணி நெல், பத்து மணிகளைத் தந்தது. நெல்லை, நாணயமாகத் தந்து மீன் மற்றும் பலசரக்கு வாங்கிக் கொண்டார்கள். வயல் நண்டுகள், ஆமைகள், ஆடுகள், மான்கள் அவர்களின் உணவாயின.

நெல் விவசாயம், இன்றுபோல அறுபது, தொண்ணூறு நாள் அவசரப் பிண்டமாக இல்லை. ஏழு, எட்டு மாதப் பயிர்கள் அவை. சுமார் 35 அல்லது 40 வகை நெல் வகைகளை அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த உழவர்கள், உலகுக்கு அச்சாணிபோல இருந்து உணவு வழங்கும் பெரும்பணியைச் செய்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் அல்லது கூட்டத்துக்கும் அவர்கள் உழைப்பினால், நிறைய நெல் மற்றும் மாடுகள் இருந்தன. மாடு என்றாலே, ‘செல்வம்’ என்று அர்த்தம், தமிழில். இந்தச் செல்வம் பகைக்குக் காரணமும் ஆயிற்று. விவசாயம் மற்றும் பால்வளம், மற்றும் இறைச்சி உணவுக்குக் காரணமாக மாடு பிடிக்கும் போர்முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு கூட்டம், மாடு பிடிக்கும் சண்டையில் இறங்க, மறுகூட்டம் மாடு மீட்கும் போரில் இறங்க, சண்டையும், சச்சரவும், தினவாழ்க்கை ஆயிற்று. ஆகவே, உழவர்கள் தங்கள் உடமைகளைக் காத்துக்கொள்ள போர் வீரர்களாகவும் மாற வேண்டி இருந்தது. அந்த வகையில் உருவான உழவு வீரர்களே மள்ளர்கள் எனப்பட்டார்கள்.

‘மள்ளர்’ என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள்.

‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. இதைவிடத் தெளிவாகப் பிங்கல நிகண்டு, ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது.

இந்தப் போர் வீரர்களில், அதாவது மள்ளர்களில், எல்லோரையும் தன் வீரத்தால் வென்ற பெரிய போர்வீரன், ‘வேந்தன்’ எனப்பட்டான். அவன் மரியாதைக்குரிய மன்னன் ஆகிறான். ‘மள்ளன்’ என்பதே ‘மன்னன்’ ஆகி இருக்கவும் வாய்ப்பு உண்டு. அந்த ‘வேந்தன்’, பின்னால் வந்த மள்ளர்களால், உழவர்களால் வணங்கப்பட்டவனாகிறான். ‘வேந்தன்’, குல முதல்வனாகி, காக்கும் தெய்வமாகவும் ஆகிறான். இதையே தொல்காப்பியம், ‘வேந்தன் மேய தீம்புவை உலகம்’ என்று இலக்கணம் வகுக்கிறது. ‘மேய’ என்பதுக்குத் தகுதியான என்று பொருள். ஆக, மருத நிலத்துக்குத் (தீம்புவைஆற்றங்கரை நிலம்) தகுதியான ஆட்சியாளன் ‘வேந்தன்’ என்கிறது தமிழ் இலக்கணம். இந்த வேந்தர்களின் பரம்பரையே சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள். ‘வேந்தன்’ என்ற சொல்லை இந்த மூன்று பேர் மட்டுமே பெற்றவர்களாகத் தமிழ் இலக்கியத்தில் விளங்குகிறார்கள்-. மற்றவர்கள் ‘வேளிர்’, ‘மன்னன்’, ‘கோ’ என் பெயரிலும் ‘அரசன்’ என்ற பெயரால் மட்டுமே அறியப்பட்டிருக்கிறார்கள்.

‘வேந்தர்’ என்ற சொல், பழைய பெரு மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையே குறிக்கும். இவர்கள் மள்ளர்களிடையேதான் உருவாகி வந்தவர்கள்.

நம் உழவர்ப் பெருங்குடியினராகிய மள்ளர்கள், தேவேந்திரர் எனவும் தேவேந்திர குல வேளாளர் எனவும் குறிப்பிடப்பட என்ன காரணம்?

யார் இந்த தேவேந்திரன்?

ஆரியர்களின் ஆதிக் கடவுள் இந்திரன். அவர்களின் முதல் வேதமாகிய ரிக் வேதத்தில் முப்பது சதவிகிதம் இந்திரன் பற்றிய பாடல்களே ஆகும். ‘எங்களுக்குச் சோறு கொடு, சுராபானம் (சாராயம்) கொடு, எங்கள் எதிரிகளை அழி என்று கேட்டுக்கொள்ளும் பாடல்கள் அவை. இந்திரன், புராணங்களின் படி தேவர்களின் கடவுள். காசிப முனிவரும், அதிதி தேவியும் அவன் பெற்றோர். அவன் மனைவி இந்திராணி. ஆயுதம் வச்சிரம். இந்திரன் பற்றிய வேறு நல்ல தகவல்கள் புராணங்களில் இல்லை. ஆனால், ஆரியர்களின் ஆதி இலக்கியங்களில் அவன் ஒப்பற்ற கடவுளாக இருக்கிறான். எல்லாவற்றுக்கும் மேலே, அவன் மழை, இடி, மின்னல் ஆகியவைகளின் கடவுளாக இருக்கிறான். ஆக, ஆரியர்களின் மழைக் கடவுள் இந்திரனே ஆவார்.

உழவுக்குக் கடவுள் மழையே. தமிழ் மரபில் மழைக் கடவுளாக வேந்தன் இருந்திருக்கிறான். விவசாயம் சார்ந்த சடங்குகளுக்குக் கடவுளும் வேந்தனாகவே இருந்திருக்கிறான். ஆரியக் கலப்பு, தமிழ் பூமியில் ஏற்பட்டு இந்து மதம் கட்டமைக்கப்பட்டபோது, தமிழ் வேந்தனும், ஆரிய தேவவேந்திரனும் ஒன்றிணைக்கப்படுகிறான். தமிழ் முருகனும், வட நாட்டு சுப்பிரமணியனும் ஒன்றிணைந்தபோது, இதுவும் நடந்தது. தமிழ்க் கொற்றவை, சிவனுக்குச் சக்தியாக மாற்றப்படும்போது இதுவும் நடந்திருக்கிறது.ஆக, மள்ளர்களான உழவர்களுக்கு ஆதிக் கடவுள் வேந்தன், பிறகு தேவேந்திரானாகி(தேவ+ இந்திரன்), அவன் வெள்ளாமைக்குக் கடவுளாகி, வெள்ளாமை செய்த உழவர்களான மள்ளர்கள், அவன் நினைவில் தேவேந்திர குல வெள்ளாளராகிறார்கள். பெயர்கள் எதுவானாலும், அவர்கள் பூர்வ, பழைய தமிழர்கள். உழவர்கள். வேளாண்மை செய்தவர்கள்.

வேந்தனாகிய இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கவே, அவன் மழை தந்தமைக்காகப் போகித் திருநாள் கொண்டாடுகிறோம். ‘போகி’ என்ற பெயர் இந்திரனுக்கு உண்டு. தேவலோகத்துப் போகங்களை (சிற்றின்பங்களை) அனுபவிக்கிறவன். அதனால் இந்திரனுக்குப் போகி என்று பெயர். அறுவடைக்கு முந்தைய நாள் இந்திரனுக்கு நன்றி கூறும் நாள். அதுவே போகி.

மறுநாள் பொங்கல் என்று இன்று நாம் சொல்லும் நாள், அறுவடை நாள் ஆகும். புதிய மகசூலைப் பொங்கலாக்கி, சூரியனுக்குப் படைக்கும் நாள், பொங்கல் நாள் ஆகும். ஒரு பக்கம் அறுவடை மறுபக்கம் புது உழவுக்குத் தொடக்க நாளும் ஆகும். வேந்தன் நெறிப்பட்ட தமிழர் மழை வணக்கமும், வேத நெறிப்பட்ட இந்திர வணக்கமும் ஒன்றையொன்று கலந்து, இந்திர விழாவில் முடிந்தன. சங்க காலத்தில் அறிமுகமான இந்திரன், மரியாதைக்குரிய மழைக் கடவுளாக மாறச் சுமார் முந்நூறு ஆண்டுகள் தேவைப்பட்டது. சிலப்பதிகாரம், மணிமேகலை காலமான 1800 ஆண்டுகளுக்குப் பிந்தைய (கி.பி.2ம் நூற்றாண்டு) கால அளவில் இந்திர வணக்கம் தமிழ்ச் சமுதாயத்தில் வேர் ஊன்றியது. இந்திரவிழா பற்றிச் சிலம்பிலும், மணிமேகலையிலும், சான்றுகள் இருக்கின்றன. மள்ளர் ஆட்சி சிறக்கவும், பசி, பிணி, பகை நீங்கவும் இந்திரனுக்குப் பலிகொடுத்துப் பூசிக்கும் வழக்கம் உருவாயிற்று. கோவலன் மாதவி பிரிவே, ஒரு இந்திர விழாவில்தான் நடந்திருக்கிறது.

சங்க காலத்துக்கும் முந்தைய தமிழ் உழவர்களாகிய மள்ளர்கள், பழந்தமிழ் வேந்தன் காலத்திய சடங்குகளை இன்னமும் விடாது செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அச் சடங்குகளில் ஒன்று நாற்று நடவுத் திருவிழா. இது மள்ளரிய நாகரிகத்தின் ஒரு முக்கியச் செயல்பாடு. இந்திர விழாச் சடங்குகளில் இதுவும் ஒன்றாகக் காணப்பட்டாலும், நாற்று நடவுத் திருவிழா சுத்தமான தமிழர் சடங்காகும். வேத நெறியில் விவசாயம் சிறப்பிடம் பெற்றதாக வரலாறு இல்லை.

‘மள்ளரியம்’ எனும் பண்பாட்டுச் சொல்லை உருவாக்கிய அறிஞர் முனைவர் தே.ஞானசேகரன், இதுபற்றிப் பல நூல்கள் எழுதி இருக்கிறார். அவைகளில் இருந்து சில குறிப்புகள் தருகிறேன்.

நாற்று நடவுத் திருவிழா மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று நாற்று விடும் விழா. இரண்டு பொன் ஏர் பூட்டும் விழா. மூன்று நாற்று நடவு விழா ஆகிய அந்தப் பிரிவுகள்.

நாற்று விடும் விழா என்கிற விதை இடும் விழா, ஆனி மாதம் 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. முன்னரே பதப்படுத்தப்பட்ட கழனியில் நெல் விதைகளைப் பரவுதல் நாற்று உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் நெல் விதையை ஊற வைத்து முளைக்க வைக்கும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. விதை நெல்லை ஊற வைக்க ஆற்றிலிருந்து நீர் எடுக்கப்படுகிறது. இது அவர்கள் ஆற்றங்கரை மனிதர்கள் என்பதை நிரூபிக்கும் பழைய ஆதாரம். ஒரு சணல் சாக்கில் நெல் விதைகளைப் போட்டுக் கட்டி, அண்டாவில் போட்டு தண்ணீருக்குள் மூழ்க வைத்து, மறுநாள் முளைத்தவுடன் எடுத்து வைத்துவிடுவது விதை நெல் முளைக்க வைக்கும் சடங்காகும்.

பொன்னேர் பூட்டு விழாவும், நாற்று நடவுத் திருவிழாவும் ஆனி 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் முடிகின்றன. கோயில் குருக்கள் பொன்னால் ஆன நாற்றை நட, மள்ளர் இன மக்கள், ஊர்த் தலைவர்கள் நாற்று நடவைத் தொடங்குகிறார்கள்.இவைகள் எல்லாம் சுத்தமான தமிழ்ச் சடங்குகளாகும். மட்டுமல்ல சுமார் மூவாயிரம் ஆண்டுகாலத் தமிழர் விவசாயத் தொல் வழக்கத்தை இன்னும் மள்ளர்கள் கைக் கொண்டிருப்பதைக் காட்டும் சடங்கும்கூட. பழந்தமிழ் சமூக எச்சம் ஒன்று இன்றும் ஜீவித்திருக்கிறது என்பதை இந்த மள்ளர் பெருமக்களின் சடங்குகளில் இருந்தே காணமுடிகிறது.

சரி. மிகப் பெரும் வழக்கத்திலிருந்த இந்திர வணக்கம், தமிழர் வாழ்வில் ஏன் மறைந்து போனது? சைவ, வைணவம்போல் அது நீடிக்காமைக்கு என்ன காரணம்? மேலும், நெல் விவசாயத்திற்கும் மள்ளர் என்கிற தேவேந்திரர்களுக்கும் உள்ள உறவு எத்தகையது-?

சரித்திரம் தொடர்கிறது

0 comments:

Sunday, June 24, 2012

மதுரை நீதி மன்ற வளாகத்திற்கு எதிரே மாவீரன் சுந்தரலிங்க குடும்பனார்

சென்ற ஆண்டுமதுரை மானகிரி பகுதியை சேர்ந்த அண்ணன் செல்வகுமார் அவர்கள் யாரும் எடுத்திடாத முயற்சியை கையில் எடுத்தார் .தனி ஒரு மனிதனாக இருந்து மதுரை நீதி மன்ற வளாகத்திற்கு எதிரே மாவீரன் சுந்தரலிங்க குடும்பனார் சிலை நிறுவ ஏற்பாடுகள் மேற்கொண்டார் ,அவர் எடுத்த முயற்சியின் பலனாக சிலை நிறுவ மதுரையில் மேற்கொள்ள படவேண்டிய அனைத்து நடைமுறைகளும் முடி...ந்து விட்டன ,இதற்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கிவிட்டார் இது போன்று அனைத்து நடைமுறை சிக்கல்களும் தீர்ந்துவிட்டன இறுதியாக மாநில உள்துறை செயலாளர் G O (general order) அளிக்க வேண்டும் ,இதை இவர் கடந்த ஜூலை யில் இருந்து இன்று வரை பரிசிலனை பண்ணாமல் இழுத்தடிக்கிறார் ,இதற்காக அண்ணன் செல்வகுமார் மதுரை உயர்நீதிமன்றத்தி வழக்கும் தொடர்ந்தார் ,நீதிபதி இந்த சிலையை நிறுவ ஒரு மாதகாலம் தான் அவகாசம் கொடுத்தார் ஆனால் உள்துறை செயலாளர் இதை இன்று வரை கண்டு கொள்ளவில்லை .இன்று இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரனைக்கு வந்திருகிறது ,ஆனால் இதை பற்றி நம் சொந்தங்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை இந்த சிலை மதுரையில் நிறுவினால் ம துரையே தலைகீழாய் மாறும் என்பது ஏன் யாருக்கும் தெரியவில்லை இதற்கு போதிய ஒத்துழைப்பு நம் மக்களிடையே இல்லை சென்னையில் வாழுகின்ற நம் மக்கள் இதை பற்றி ஏன் சிந்திக்க வில்லை ,இதன் அருமை யாருக்கும் புரியவில்லை இந்த சிலை மதுரையில் நிருவபட்டால் நம் சமுகத்திற்கு மிகபெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்பதை சிந்தித்து பாருங்கள் .தனி ஒரு மனிதனாக இருந்து ஒரு செயலை முழுவதுமாக வெற்றி காண்பது மிகக்கடினம் எனவே நாம் இந்த முக்கியமான செயலை பெரிதாய் கொண்டு செல்லவேண்டும் அண்ணன் செல்வகுமார் அவர்களுக்கு உறுதுணையை நிற்க வேண்டும் .இச்சிலை நிறுவாமல் இழுத்தடிக்கும் உள்துறை செயலரை கண்டித்து போராட்டங்கள் ,போஸ்டர்கள் ,கண்டன ஆர்பாட்டங்கள் மூலமாக நாம் நமது கோரிக்கையை வெளிபடுத்தினல் ஒழிய நமக்கு சிலை கிடைகாது சொந்தங்களே .சிந்தியுங்கள் இந்த சிலை மதுரையில் நிறுவ பட்டால் மதுரை முக்குலத்தோர் கோட்டை என்கிற போலி பின்பம் சுக்குநூறாய் உடையும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் ,எனவே நாம் ஒன்றிணைந்து போராடி சிலையை நிறுவ பாடு படுவோம் !மள்ளர்குல சொந்தங்களுக்கு ஆதங்கத்தோடு வேண்டுகோள் விடுக்கிறேன் !
சென்ற ஆண்டுமதுரை மானகிரி பகுதியை சேர்ந்த அண்ணன் செல்வகுமார் அவர்கள் யாரும் எடுத்திடாத முயற்சியை கையில் எடுத்தார் .தனி ஒரு மனிதனாக இருந்து மதுரை நீதி மன்ற வளாகத்திற்கு எதிரே மாவீரன் சுந்தரலிங்க குடும்பனார் சிலை நிறுவ ஏற்பாடுகள் மேற்கொண்டார் ,அவர் எடுத்த முயற்சியின் பலனாக சிலை நிறுவ மதுரையில் மேற்கொள்ள படவேண்டிய அனைத்து நடைமுறைகளும் முடிந்து விட்டன ,இதற்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கிவிட்டார்  இது போன்று அனைத்து நடைமுறை சிக்கல்களும் தீர்ந்துவிட்டன இறுதியாக மாநில உள்துறை செயலாளர் G O (general order) அளிக்க வேண்டும் ,இதை இவர் கடந்த ஜூலை யில் இருந்து இன்று வரை பரிசிலனை பண்ணாமல் இழுத்தடிக்கிறார் ,இதற்காக அண்ணன் செல்வகுமார் மதுரை உயர்நீதிமன்றத்தி வழக்கும் தொடர்ந்தார் ,நீதிபதி இந்த சிலையை நிறுவ ஒரு மாதகாலம் தான் அவகாசம் கொடுத்தார் ஆனால் உள்துறை செயலாளர் இதை இன்று வரை கண்டு கொள்ளவில்லை .இன்று இந்த வழக்கு சென்னை  உயர்நீதி மன்றத்தில் விசாரனைக்கு வந்திருகிறது ,ஆனால் இதை பற்றி நம் சொந்தங்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை இந்த சிலை மதுரையில் நிறுவினால்  ம துரையே தலைகீழாய் மாறும் என்பது ஏன் யாருக்கும் தெரியவில்லை இதற்கு போதிய ஒத்துழைப்பு நம் மக்களிடையே இல்லை சென்னையில் வாழுகின்ற நம் மக்கள் இதை பற்றி ஏன் சிந்திக்க வில்லை ,இதன் அருமை யாருக்கும் புரியவில்லை இந்த சிலை மதுரையில் நிருவபட்டால் நம் சமுகத்திற்கு  மிகபெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்பதை சிந்தித்து  பாருங்கள் .தனி ஒரு மனிதனாக இருந்து ஒரு செயலை முழுவதுமாக வெற்றி காண்பது மிகக்கடினம் எனவே நாம் இந்த முக்கியமான செயலை பெரிதாய் கொண்டு செல்லவேண்டும் அண்ணன் செல்வகுமார் அவர்களுக்கு உறுதுணையை நிற்க வேண்டும் .இச்சிலை நிறுவாமல் இழுத்தடிக்கும் உள்துறை செயலரை கண்டித்து போராட்டங்கள் ,போஸ்டர்கள் ,கண்டன ஆர்பாட்டங்கள் மூலமாக நாம் நமது கோரிக்கையை வெளிபடுத்தினல் ஒழிய நமக்கு சிலை கிடைகாது சொந்தங்களே .சிந்தியுங்கள் இந்த சிலை மதுரையில் நிறுவ பட்டால் மதுரை முக்குலத்தோர் கோட்டை என்கிற போலி பின்பம் சுக்குநூறாய் உடையும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் ,எனவே நாம் ஒன்றிணைந்து போராடி சிலையை நிறுவ பாடு  படுவோம் !